நீதிமொழிகள் 16:20-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.

21. இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.

22. புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

23. ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

நீதிமொழிகள் 16