யோபு 42:13-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

14. மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.

15. தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

16. இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

17. யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.

யோபு 42