சங்கீதம் 8:4-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

5. நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

6. உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து,

7. ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,

8. ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.

சங்கீதம் 8