எண்ணாகமம் 3:15-32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.

16. அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்ட பிரகாரம் அவர்களை எண்ணினான்.

17. லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

18. தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.

19. தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.

20. தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.

21. கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.

22. அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள்.

23. கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.

24. கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன்.

25. ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும்,

26. வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.

27. கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.

28. ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

29. கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.

30. அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.

31. அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

32. ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

எண்ணாகமம் 3