1. அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2. நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
3. நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
4. கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
5. துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
6. அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
7. அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.