யோசுவா 19:1-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

2. அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,

3. ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்.

4. எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,

5. சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,

6. பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.

7. மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

8. இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

9. சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

யோசுவா 19