நெகேமியா 7:24-44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

24. ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

25. கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.

26. பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

27. ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

28. பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.

29. கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

30. ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.

31. மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.

32. பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.

33. வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.

34. மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

35. ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

36. எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.

37. லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.

38. செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.

39. ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

40. இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

41. பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.

42. ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

43. லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.

44. பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

நெகேமியா 7