நியாயாதிபதிகள் 12:2-6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

2. அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லை.

3. நீங்கள் என்னை இரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.

4. பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு யுத்தம்பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர் சொன்னபடியினால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள்.

5. கீலேயாத்தியர் எப்பிராயீமுக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,

6. நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்.

நியாயாதிபதிகள் 12