சங்கீதம் 6:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

2. என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன.

3. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; எதுவரைக்கும் கர்த்தாவே?

சங்கீதம் 6