7. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
8. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
9. கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் "கர்த்தருக்கு மகிமை" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10. கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.