சங்கீதம் 26:7-10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

8. கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் ஸ்தலத்தையும் வாஞ்சிக்கிறேன்.

9. என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

10. அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை இலஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 26