23. ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
24. அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
25. கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
26. ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
27. மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
28. பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.