1. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2. செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
3. பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
4. செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
5. ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
6. யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
7. ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
8. சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9. சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10. பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11. பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12. அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
13. அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.