26. செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
27. இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.
28. யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
29. மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
30. கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேரியரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும்,