20. அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
21. அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
22. அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
23. அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
24. எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
25. தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
26. அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
27. அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.