33. இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும் பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியதிருந்தபடியினால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.
34. லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்,
35. கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.
36. அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
37. கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.
38. மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
39. நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசுவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.