1. இஸ்ரவேல் எல்லாரும் தங்கள் வம்சவரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
2. தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதினீமியருமே.
3. யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,
4. யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் குமாரன் ஊத்தாய்.
5. சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,