1 நாளாகமம் 7:29-40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

29. மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.

30. ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.

31. பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.

32. ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.

33. யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.

34. சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.

35. அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.

36. சோபாக்கின் குமாரர் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,

37. பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.

38. யெத்தேரின் குமாரர், எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.

39. உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.

40. ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.

1 நாளாகமம் 7