1 நாளாகமம் 6:32-46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

32. சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்.

33. கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.

34. இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.

35. இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.

36. இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

37. இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன்.

38. இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.

39. இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.

40. இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.

41. இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.

42. இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன்.

43. இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

44. மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.

45. இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.

46. இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.

1 நாளாகமம் 6