1. லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
2. கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
3. அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
4. எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
5. அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.
6. ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
7. மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
8. அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
9. அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
10. யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான்.