1 நாளாகமம் 2:8-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.

9. எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.

10. ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.

11. நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.

12. போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.

13. ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,

14. நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,

15. ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் எட்டாம் குமாரனையும் பெற்றான்.

16. அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.

17. அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.

1 நாளாகமம் 2