9. கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
10. கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
11. மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
12. பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
13. கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
14. எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
15. ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,